ADDED : நவ 03, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி மேரி மாதா கலை அறிவியல் கல்லுாரி நிர்வாம், சைபர் குற்றத்தடுப்பு போலீசார் இணைந்து சர்தார் வல்லபாய் படேலின் 150 வது பிறந்த தினம் மற்றும் தேசிய ஒற்றுமை தின விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் ஐசக் பூச்சாங்குளம் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜோஷி பரம்தொட்டு, நிர்வாக அலுவலர் பிஜோய் மங்களத்து முன்னிலை வகித்தனர்.
தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் கீதா, சைபர் குற்றப் பாதுகாப்பு எஸ்.ஐ., அழகுபாண்டி, தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணி கண்டன் பேசினர்.
இதில் ஆன்லைனில் நடக்கும் குற்றங்கள், போதைப் பொருள் தடுப்பு, பெண்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மாணவர்கள், மாணவிகள், பேராசிரியர்கள், போலீசார் பங்கேற்ற னர்.

