ADDED : மார் 30, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி மாவட்டத்திற்கு புதிதாக காங்கிரஸ் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் கோபிநாத் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்ட துணைத் தலைவர்களாக சன்னாசி, சித்ரா, முபாரக், சுப்புராஜ், மொய்தீன் அப்துல் காதரும், மாவட்ட பொருளாளராக நயினார் முகமதும், மாவட்ட பொதுச் செயலாளர்களாக செல்லையா, சின்ஸ், வெனிராஜ், முகமது ரசூல், பன்னீர்செல்வமும் நியமிக்கப்பட்டனர். மாவட்ட துணை பொதுச் செயலாளர்களாக முத்துராஜ், ரகுராம், பரமராஜ், சர்புதீன், ரியாஸ்கானும், மாவட்டச் செயலாளர்களாக சத்தியமூர்த்தி, விக்னேஷ் கார்த்திக், அமச்சந்திரன், மகாராஜன், தர்மர் நியமிக்கப்பட்டனர். தேனி நகர் தலைவராக முகமது சம்சுதீன், ஆண்டிபட்டி நகர தலைவராக ரவீந்திரன், உத்தமபாளையம் நகர தலைவராக ஸ்ரீனிவாச ராயர், கம்பம் நகர தலைவராக அன்பரசன் நியமிக்கப்பட்டனர்.
