/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுதானியங்கள்பயறு வகை விதை விற்பனை அரசு புதிய உத்தரவு
/
சிறுதானியங்கள்பயறு வகை விதை விற்பனை அரசு புதிய உத்தரவு
சிறுதானியங்கள்பயறு வகை விதை விற்பனை அரசு புதிய உத்தரவு
சிறுதானியங்கள்பயறு வகை விதை விற்பனை அரசு புதிய உத்தரவு
ADDED : அக் 06, 2025 05:55 AM
கம்பம் : சிறு தானியங்கள், பயறு வகை விதைகளை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படும் சோளம், கம்பு, தினை, குதிரைவாலி, கேப்பை உள்ளிட்ட சிறுதானிய விதைகளும், உளுந்து, பாசிப்பயறு, தட்டை, மொச்சை உள்ளிட்ட பயறு வகைகளின் விதைகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் துறை வழங்கி வருகிறது. வேளாண் துறையின் டெப்போக்களில் விற்பனை செய்யப்படும் விதைகளை பெறுவதில் சில சமயங்களில் சிரமங்கள் உள்ளன. ஒரு சில வட்டாரங்களில் நீண்ட நேரம் பயணம் செய்து வேளாண் டெப்போவிற்கு செல்ல வேண்டும். இதை தவிர்க்க விதை வகைகளை அனைத்து ஊரிலும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே பயிர் கடன் வழங்குவது, உரம் வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த பணிகளுடன் சிறுதானிய விதைகள், பயறு வகை விதைகளையும் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், மானாவாரி விவசாயிகள் வேளாண் துறை வழங்கும் விதை வகைகளை இனி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகளின் நலன் கருதி இந்த முடிவை வேளாண்துறை எடுத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.