UPDATED : ஜூன் 14, 2026 04:07 PM
ADDED : ஜூன் 14, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:தெப்பம்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் அமாவாசை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மாவூற்று வேலப்பருக்கு பால்,தயிர், பன்னீர், சந்தனம் உட்பட பல வகை அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கருப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தேனி, வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் வடை மாலை அணிவித்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
