/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க புதியமோட்டார், பகிர்மான குழாய் அமைப்பு

ADDED : ஏப் 04, 2025 05:36 AM
கூடலுார்: கூடலூர் நகராட்சியில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க புதிய பம்பிங் மோட்டார்,பகிர்மான குழாய் அமைத்து துவக்கி வைக்கப்பட்டது.
கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். முல்லைப் பெரியாற்றின் தலைமதகுப் பகுதியான கூடலுாரில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் பம்பிங் செய்வதற்காக 60 குதிரை திறன் கொண்ட மூன்று பம்பிங் மோட்டார்கள் உள்ளன. மூன்றும் ஒரே நேரத்தில் இயங்கும் போது ஒரு பைப் லைன் மூலம் நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்பும்.
இதனால் ஏற்படும் காலதாமதத்தால் முழுமையாக கூடலுார் நகராட்சியில் குடிநீர் சப்ளை செய்ய முடிவதில்லை. இதனால் தனியாக 60 குதிரைதிறன் கொண்ட ஒரு பம்பிங் மோட்டார் அமைத்து ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் பகிர்மான குழாய் அமைக்கும் பணி நடந்தது. இப்பணி முடிவடைந்து நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான துவக்க விழா நகராட்சி தலைவர் பத்மாவதி தலைமையில், கவுன்சிலர் லோகந்துரை முன்னிலையில் நடந்தது. முழுமையாக மின்சாரம் இருந்தால் இத்திட்டத்தின் மூலம் தொடர்ந்து 24 மணி நேரம் பம்பிங் செய்யப்பட்டு குடிநீர் பற்றாக்குறையின்றி சப்ளை செய்ய முடியும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.