ADDED : செப் 17, 2018 11:42 PM
அ நிறம் | அளவு
தேனி;தேனியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் , கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், கவிஞர் ஜோதிபாரதியின் 'சூரியத் துாரிகை' என்ற கவிதை நுால் வெளியீட்டு விழா நடந்தது. செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயலாளர் ஜவஹர் முன்னிலை வகித்தார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை பொதுச்செயலாளர் ராஜமோகன் நுாலை வெளியிட்டார்.ஓய்வு சப்-- கலெக்டர் ராஜசேகரன் பெற்றுக்கொண்டார். கவிஞர் முத்துநிலவன் பேசினார்.எழுத்தாளர்கள் காமுத்துரை, தேனி சீருடையான், தமிழ்மணி நடேசன் வாழ்த்தினர். எழுத்தாளர் அல்லிஉதயன் தொகுத்து வழங்கினர். ஜோதி பாரதி நன்றி கூறினார்.
