/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ந.ம.மு.க., தலைவர் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
/
ந.ம.மு.க., தலைவர் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ந.ம.மு.க., தலைவர் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ந.ம.மு.க., தலைவர் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ADDED : டிச 26, 2025 05:42 AM

கம்பம்: கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ராவின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கம் விழா நடந்தது.
கம்பத்தில் நேற்று நடந்த பிறந்தநாள் விழாவில் ந.ம.மு.க., கட்சியின் தலைவர் ஜெகநாத் மிஸ்ராவை குறிக்கும் வகையில் 50 கிலோ எடை கொண்ட கேக் கொண்டு வரப்பட்டு, தொண்டர்கள், நிர்வாகிகள் வாழ்த்துக்களை பரிமாறினர்.
பின் முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் குமரேசன், மாநில துணைப் பொதுச் செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டப்பட்டது.
மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராமன் செங்கோல் வழங்கினார். முன்னதாக கம்ப ராயப் பெருமாள் கோயில், வேலப்பர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
நகர் பகுதியில் பிறந்தநாளை முன்னிட்டு 50 மரக்கன்றுகள் நடப்பட்டு, 50 பேர் ரத்ததானம் வழங்கினர். நேதாஜி காப்பகத்திற்கு கிரைண்டர், மிக்சிகள் வழங்கப்பட்டன. பின்னர் நடந்த நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள், நலிவுற்ற மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை வழங்கப்பட்டன. மாநில பொதுச் செயலாளர் பர்மா கணேசன், துணைப் பொதுச் செயலாளர் பெரிய சேகரன், மதுரை மாவட்டப் பொதுச் செயலாளர் சாஸ்தா பாண்டியன், மதுரை மாவட்ட அமைப்பாளர் தில்லைராஜ் பொருளாளர் ராஜேந்திரன், மாநில ஊடக பிரிவுச் செயலாளர் அபுதாகீர், அமைப்புச் செயலாளர் சீனிவாசன், போக்குவரத்து பிரிவு அமைப்பாளர் நந்தகுமார், தேனி மாவட்டத் தலைவர் திருப்பதி, நகரச் செயலாளர் அய்யர், சுப்ரமணி, பாலமுத்தழகு குழுமத்தின் பணியாளர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

