ந.ம.மு.க., கூட்டணி அமைக்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
ந.ம.மு.க., கூட்டணி அமைக்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
ADDED : ஜன 29, 2026 06:03 AM
கம்பம்: வரும் 2026 சட்டசபை தேர்தலில் ந.ம.மு.க., கட்சி யாருடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்து கேட்பு நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆறு மாதங்களுக்கு முன் நமது மக்கள் முன்னேற்ற கழகம் துவங்கி அனைத்து மாவட்டங்களிலும் கட்சி கட்டமைப்பை உருவாக்கி உள்ளனர். சமீபத்தில் புதுச்சேரியில் மாநாடு நடத்தினார்.
இச் சூழலில் சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்து சமீபத்தில் நடந்த மண்டல மாநாட்டில், அதற்கான படிவம் வழங்கப்பட்டது. அதில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என 'டிக்' செய்து அங்குள்ள பெட்டி யில் செலுத்த கூறினர். அதன் படி நிர்வாகிகள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். அந்த பெட்டிகளை சென்னைக்கு கொண்டு சென்று நிர்வாகிகள் மனநிலையை அறிந்து கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளதாக ந.ம.மு.க. கட்சி நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தார்.
