/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் நகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம்: எகிறும் எதிர்பார்ப்பு
/
கம்பம் நகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம்: எகிறும் எதிர்பார்ப்பு
கம்பம் நகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம்: எகிறும் எதிர்பார்ப்பு
கம்பம் நகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம்: எகிறும் எதிர்பார்ப்பு
ADDED : அக் 05, 2025 04:18 AM
கம்பம்: கம்பம் நகராட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா அல்லது தோல்வியடையுமா என்பதை தெரிந்து கொள்ள பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் எகிறி வருகிறது.
கம்பம் நகராட்சியில் தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் வனிதா, துணை தலைவர் சுனோதா உள்ளனர். மொத்தம் உள்ள 33 கவுன்சிலர்களில் தலைவர், துணைத்தலைவர் உள்பட தி.மு.க. 24, அ.தி.மு.க. 7, காங். இ.யூ.மு.லீக் தலா ஒருவர் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக தலைவர், கவுன்சிலர்களும் சுமூக உறவில் இருந்தனர். கடந்த சில மாதங்களாக இருதரப்பினரிடையே மோதல் போக்கு நிலவியது. இதன் எதிரொலியாக தி.மு.க. மேலிட பார்வையாளர், எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்தும் பலனில்லை. -
தி.மு.க., கவுன்சிலர்கள் 16 பேர், அ.தி.மு.க. 6 பேர்கள் தனித்தனியாக தலைவர், துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ளனர். அக். 9 ல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.
மொத்தம் உள்ள 33 கவுன்சிலர்களில் 27 பேர் ஆதரவு தேவை என்றும், 27 கவுன்சிலர்களுக்கும் குறைவாக வந்தால் கூட்டம் நடத்த முடியாது என்கின்றனர் நகராட்சி அதிகாரிகள். தற்போதைய நிலவரப்படி தலைவர் , துணை தலைவர் உள்பட 8 பேர் தலைவருக்கு ஆதரவாக உள்ளனர்.
இரு அணியினரும் கவுன்சிலர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட ஒருவர் தனது மனைவியை தலைவராக்க 'பெரும்' முயற்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கூட்டம் நடைபெற 3 நாட்கள் உள்ள நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்றனர். மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில், கம்பத்தில் மட்டும் இப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.