UPDATED : ஜூன் 13, 2026 11:00 PM
ADDED : ஜூன் 13, 2026 10:42 PM
அ நிறம் | அளவு
தேனி:ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு நடந்தது. மாவட்ட துணை தலைவர் சக்தி திருமுருகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விடுமுறை நாட்களில் ஆய்வு பணிகளை கைவிட வேண்டும்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் வருவாய் துறை அதிகாரிகளுக்கு பதில் வளர்ச்சித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்த கூடாது. ஆய்வு கூட்டங்களில் டி.ஆர்.ஓ., கடிந்து கொள்வதை கைவிட வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம். தாமதம் இன்றி பதி உயர்வுகள் வழங்க வேண்டும். பணிமாறுதல் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றினர்.
