UPDATED : நவ 19, 2026 07:06 PM
ADDED : நவ 19, 2026 07:06 PM

அ நிறம் | அளவு
தேனி: தேனி புது பஸ் ஸ்டாண்டில் வட்டார போக்குவரத்து அதிகாரி மாணிக்கம், தேனி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணமூர்த்தி, போக்குவரத்து பணியாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள், கண் கூசும் முகப்பு விளக்கு, வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் பெர்மிட் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது விதிமீறலில் ஈடுபட்ட 3 அரசு பஸ்கள் உள்பட 6 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். அவற்றுக்கு கலெக்டர் சிவகிருஷ்ண மூர்த்தி அபராதம் விதிக்க பரிந்துரை செய்தனர்.
