/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அல்லிநகரம் மந்தைகுளம் கண்மாயை ஆக்கிரமித்த 96 பேருக்கு 'நோட்டீஸ்'
/
அல்லிநகரம் மந்தைகுளம் கண்மாயை ஆக்கிரமித்த 96 பேருக்கு 'நோட்டீஸ்'
அல்லிநகரம் மந்தைகுளம் கண்மாயை ஆக்கிரமித்த 96 பேருக்கு 'நோட்டீஸ்'
அல்லிநகரம் மந்தைகுளம் கண்மாயை ஆக்கிரமித்த 96 பேருக்கு 'நோட்டீஸ்'
ADDED : அக் 13, 2025 03:45 AM
தேனி: தேனி அல்லிநகரத்தில் மந்தைகுளம் கண்மாய் கரையில் ஆக்கிரமித்து கட்டி உள்ள வீடுகளை அக்.22க்குள் அகற்ற கெடு விதித்து 96 பேருக்கு நீர்வளத்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
தேனி அல்லிநகரத்தில் இருந்து வீரப்ப அய்யனார் மலைக்கோயில் செல்லும் ரோட்டில் மந்தைகுளம் கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாய் நீர்வளத்துறையின் மஞ்சளாறு வடிநில உபகோட்டத்தில் தேனி பாசனப் பிரிவு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கண்மாயில் சில மாதங்களுக்கு முன் ரூ.50 லட்சம் செலவில் கரையை பலப்படுத்த கல் பதிக்கும் பணிகள் நடந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அக்.22க்குள் அகற்றுமாறு 96 பேருக்கு நீர்வளத்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அகற்றவில்லை எனில் துறை மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதற்கான தொகை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலிக்கப்படும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் வழங்கப்பட்ட சிலர் கூறியதாவது: எங்களுக்கு வேறு இடம் வழங்க கோரி கலெக்டரிடம் இன்று முறையிட உள்ளோம்., என்றனர்.
நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் அரவிந்த் கூறுகையில், 'நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு சீலையம்பட்டியில் மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலர் அதனை ஏற்க மறுக்கின்றனர்.', என்றனர்.