ADDED : ஜன 21, 2026 05:56 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பெடுத்து ரோடு மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் லட்சுமி தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் அமுதா, பிச்சைபாண்டியம்மாள், சாந்தி, சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் ஜெயபாண்டி, சண்முகம், வெண்மணி, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசந்திரன், பிற சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், ஜானகி, துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறியலில் ஈடுபட்ட 254 பெண்கள் உட்பட 257 பேரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
பணியாளர்கள் பலர் விடுப்பு எடுத்திருந்ததால், சில பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
