ADDED : ஆக 25, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.
26–தேனி கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களை நிரப்பிட கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கமீனா தலைமை வகித்தார். மாநில செயலாளர் நுார்ஜஹான் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் குமரன், பொருளாளர் அமுதா, மாநில நிர்வாகி ஈஸ்வரி, சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், கருவூலத்துறை மாவட்ட தலைவர் குமார் செல்வன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
