ADDED : அக் 31, 2024 03:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நகர்பகுதியில் விழிப்புணர்விற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை, போக்குவரத்திற்கு இடையூறாக மாறி உள்ளது.
தேனி நகர்பகுதியில் போக்குவரத்து போலீசார் சார்பில் பல இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அப்போது சில விழிப்புணர்வு பலகைகளையும் அகற்றினர்.
தேனி பெரியகுளம் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய அளவிலான விழிப்புணர்வு பலகையை டி.வி.எஸ்., ரோடு நுழைவு வாயில் பகுதியில் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
சிலர் அந்த இடத்தில் அசுத்தம் செய்வதால் துர்நாற்றமும் வீசுகிறது. இதனை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

