ADDED : ஏப் 05, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், பிற அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது.
டி.ஆர்.ஓ. ராஜகுமார் தலைமை வகித்தார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராம கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தாட்கோ மேலாளர் சுந்தரராஜன் தலைமையில் தாசில்தார் செந்தில்குமார், ஆர்.ஐ. இளங்கோவன் ஒருங்கிணைத்தனர்.
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை கையாள்வது, படிவங்களை பூர்த்தி செய்வது, படிவங்கள் வழங்குவது பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் 292 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பங்கேற்றனர். கடந்த வாரம் தேனி மாவட்டத்தில் தொகுதிக்கு ஒரு மையத்தில் ஓட்டுச்சாவடி பயிற்சிகள் வழங்கப் பட்டது.
இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.
