/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேவையற்ற செலவுகளை தவிர்க்க ஊராட்சிகளுக்கு அதிகாரிகள் உத்தரவு
/
தேவையற்ற செலவுகளை தவிர்க்க ஊராட்சிகளுக்கு அதிகாரிகள் உத்தரவு
தேவையற்ற செலவுகளை தவிர்க்க ஊராட்சிகளுக்கு அதிகாரிகள் உத்தரவு
தேவையற்ற செலவுகளை தவிர்க்க ஊராட்சிகளுக்கு அதிகாரிகள் உத்தரவு
ADDED : டிச 07, 2024 08:19 AM
கம்பம்: ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவிற்கு வருவதால் தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டாம் என ஊராட்சி நிர்வாகத்தினருக்கு ஒன்றிய அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புக்களில் ஊராட்சி தலைவர்களுக்கு தான் 'செக்' பவர் வழங்கப்பட்டுள்ளது. சில ஊராட்சிகளில் விருப்பத்திற்கு 'செக்' பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் துணை தலைவர், செயலர் இருவரும் கூடுதலாக செக்கில் கையெழுத்து போட்டால் தான் செக் பாஸ் ஆகும் என்று அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே
ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் 2025 ஜனவரி மாதம் 5 ம் தேதியுடன் முடிவிற்கு வருகிறது. எனவே தேவையற்ற செலவுகளை தவிர்க்க ஒன்றிய பி. டி.ஓ. க்கள் , ஊராட்சி தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் செலவுகளை உன்னிப்பாக கவனிக்கும் படி மண்டல பி.டி.ஓ. க்களுக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பல ஊராட்சிகளுக்கு கனிம வள நிதியை கலெக்டர்கள் விடுவிக்காமல் உள்ளனர்.
மேலும் பராமரிப்பு செலவுகளுக்கென அரசு தரும் மாநில நிதிக் குழு மானியம் இந்த மாதம் அனுமதிக்கப்படவில்லை. பதவிக் காலம் முடிவிற்கு வருவதால், நிதி வீணடிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசும், அதிகாரிகளும் ஊராட்சி நிர்வாகங்களுக்கு பல நெருக்கடிகளை தந்து வருகின்றனர். இதனால் ஊராட்சி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.