UPDATED : ஆக 05, 2026 08:54 PM
ADDED : ஆக 05, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி ஊரக வளர்ச்சி முகமை முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க நகர தலைவர் தயாளன் தலைமை வகித்தார். காலியாக உள்ள ஊராட்சி செயலாளர், டிரைவர், எழுத்தர், வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும், விக்சிக்த் பாரத் ஜிராம்ஜி திட்டத்தில் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தனியாக பி.டி.ஓ., பணியிடம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தினர். சங்க நிர்வாகிகள் அழகுநாச்சி, விவேக், ரெங்கநாயகி, நதியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
