/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கையெழுத்து வாங்க 160 கி.மீ., பயணிக்கும் அலுவலர்கள் தேனிக்கு சி.இ.ஓ., இன்றி தவிக்கும் கல்வித்துறை

ADDED : அக் 10, 2025 03:34 AM
தேனி: மாவட்டத்திற்கு நிரந்தர சி.இ.ஓ., நியமிக்காததால் முக்கிய கோப்புகளில் கையெழுத்து வாங்க 160 கி.மீ., பயணிக்கும் அவல நிலைக்கு கல்வித்துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
தேனி சி.இ.ஓ.,வாக பணிபுரிந்த இந்திராணி ஜூன் 30ல் ஓய்வு பெற்றார். இதனால் திண்டுக்கல் சி.இ.ஓ., உஷாவிற்கு தேனி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. சுமார் 100 நாட்கள் கடந்தும் மாவட்டத்திற்கு நிரந்தர சி.இ.ஓ., நியமிக்கவில்லை. பொறுப்பு சி.இ.ஓ., சில நாட்கள் மட்டும் தேனி வருகிறார். மற்ற நாட்களில் பணிகளை திண்டுக்கலில் இருந்தே கவனிக்கிறார். இதனால் பள்ளிகளில் ஆய்வு என்பது கடந்த மூன்று மாதங்களாக இல்லை.
கல்வித்துறையினர் சிலர் கூறுகையில், 'தமிழகத்தில் 18க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சி.இ.ஓ., இல்லாத நிலை உள்ளது. அங்கு டி.இ.ஓ.,க்கள் பொறுப்பு சி.இ.ஓ.,க்களாக பணிபுரிகின்றனர். ஆனால், தேனி மாவட்டத்தில் உள்ள டி.இ.ஓ.,க்கள் அனுபவம் குறைவு என்பதால் திண்டுக்கல் சி.இ.ஓ.,விற்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உள்ளனர். முக்கிய கோப்புகளில் கையெழுத்து வாங்க 160 கி.மீ., சென்று வரும் நிலை உள்ளது,' என்றனர்.