/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆம்னி பஸ்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
/
ஆம்னி பஸ்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 18, 2025 04:34 AM
தேனி: ''தேனி நகர் பகுதியில் ஆம்னி பஸ்களால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. இதனை தவிர்க்க பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ்களை நிறுத்தி செல்லஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னை, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணிபுரிகின்றனர். இது தவிர வர்த்தகம், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றிற்காகவும் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இதில் பெரும்பாலனவர்கள் தனியார் ஆம்னி பஸ்களை நம்பி உள்ளனர். தேனியில் கம்பம் ரோட்டில் கொட்டக்குடி ஆற்றப் பாலத்திற்கு இரு பகுதிகள், பெரியகுளம் ரோட்டில் தீயணைப்பு நிலையம் அருகே ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றனர். தினமும் 30க்கும் மேற்பட்ட பஸ்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அல்லது வேறு இடத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

