தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மூணாறில் பெயரளவில் நடந்த ஓணம் கொண்டாட்டம்

மூணாறில் பெயரளவில் நடந்த ஓணம் கொண்டாட்டம்

மூணாறில் பெயரளவில் நடந்த ஓணம் கொண்டாட்டம்


UPDATED : ஆக 30, 2026 07:31 PM

ADDED : ஆக 30, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 07:31 PM ADDED : ஆக 30, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு:மூணாறில் மாவட்ட சுற்றுலாதுறை, ஊராட்சி ஆகியோர் சார்பில் ஓணம் சுற்றுலா வார கொண்டாட்டம் பெயரளவில் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகை ஆக. 26ல் கொண்டாடப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் ஓணம் கொண்டாட்டம் ஆக. 21ல் துவங்கி செப்.5 வரை நடக்கிறது.மூணாறில் மாவட்ட சுற்றுலாதுறை, ஊராட்சி சார்பில் ஓணம் சுற்றுலா வார கொண்டாட்டம் ஆக. 22ல் துவங்கியது. அதன்பிறகு எவ்வித நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை.

நேற்று முன்தினம் அத்தப்பூ கோலப்போட்டி நடந்தது. அதில் தேவிகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட 13 ஊராட்சிகள் பங்கேற்பதாக அறிவித்தனர். ஆனால் மூணாறு, பைசன்வாலி ஆகிய ஊராட்சிகள் மட்டும் பங்கேற்றன. அதேபோல் கொண்டாட்டத்தின் நிறைவு நாளான நேற்று கலாச்சார ஊர்வலம் நடப்பதாக தெரிவித்தனர். தூய்மை பணியாளர்கள், 7 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மட்டும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். மாவட்ட சுற்றுலாதுறை, ஊராட்சியின் நிதியை பயன்படுத்தி ஓணம் கொண்டாட்டம் நடந்த போதும் சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் எவ்வித நடவடிக்கைகளும் இல்லை. மேலும் வார கொண்டாட்டம் என அறிவிக்கப்பட்டு ஒரு சில நாட்கள் மட்டும் பெயரளவில் கொண்டாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us