/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலா பயணிகளை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது
/
சுற்றுலா பயணிகளை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது
ADDED : அக் 11, 2025 04:50 AM

மூணாறு: மூணாறில் சுற்றுலா பயணிகளை தாக்கிய வழக்கில் டிரைவர் தீபக்ராஜ் 26,யைபோலீசார் கைது செய்தனர்.
கேரளா, எர்ணாகுளம் மாவட்டம் திருக்காகரா பகுதியைச் சேர்ந்த ஆதில் முகம்மது, மனைவி ஷிஜிமோள், மகன் சுபீன் ஆகியோர் அக்.6ல் காரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்களை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் அறை உள்ளதாக கூறி காலனி பகுதிக்கு அழைத்துச் சென்றார். அறை சரியில்லை என நிராகரித்தனர். அருங்கிருந்து திரும்புகையில் வழியில் வாகனம் நிறுத்தியது தொடர்பாக சுற்றுலா பயணிகளிடம் சிலர் வாக்குவாதம் செய்தனர்.
அதன் பிறகு பழைய மூணாறு பகுதியில் சி.எஸ்.ஐ. சர்ச் அருகே ரோட்டோர கடையில் இரவில் உணவு சாப்பிட்ட பயணிகளை இரண்டு காரில் வந்தவர்கள் தாக்கினர். அதில் பலத்த காயம் அடைந்த மூவரையும் டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவத்தில் நல்லதண்ணி எஸ்டேட் செல்லும் ரோட்டில் வசிக்கும் டாக்சி டிரைவரும், சுற்றுலா வழிகாட்டியுமான தீபக்ராஜனுக்கு 26, தொடர்புள்ளதாக தெரியவந்தது. மூணாறு போலீசார் தீபக்ராஜன் மீது வழக்கு பதிவு செய்து, அவரது காரை இரண்டு நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர்.
மூணாறு இன்ஸ்பெக்டர் பினோத்குமார் தலைமையில் போலீசார் தீபக்ராஜனை நேற்று கைது செய்தனர்.