ADDED : மார் 05, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.மீனாட்சிபுரம் ரூதன் குமார் 21, ஆட்டோடிரைவர். அவரது நண்பர்கள் பிரதாப் குமார் 24, மூவித் குமார் 24, ஆகியோருடன் ஏற்றிக் கொண்டு மீனாட்சிபுரத்திலிருந்து வீரபாண்டி சென்றார்.
ரூதன்குமார் ஆட்டோவை ஓட்டினார். ம.சுப்புலாபுரம்-அம்மச்சியாபுரம் ரோட்டில் கண்ணன் தோட்டம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்கு சிக்கியத.
இதில் மூவித் குமார் இறந்தார். ரூதன் குமார், பிரதாப் குமார் ஆகியோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர். க. விலக்கு போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
