/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லால் தாக்கியதில் ஒருவர் பலி: மூவர் கைது
/
கல்லால் தாக்கியதில் ஒருவர் பலி: மூவர் கைது
ADDED : அக் 30, 2025 04:36 AM

போடி:  போடி அருகே கொட்ட குடியில் வசிப்பவர்கள் சுரேஷ் 32, மாசிலாமணி 28.  இவர்கள் இருவரும் குரங்கணி மேல் முட்டத்தில் செல்வராஜ் தோட்டத்தில் வேலை செய்தனர்.
சுரேஷ், மாசிலாமணி இருவரும் நேற்று முன்தினம் போடி புதூர் வலசத்துறை ரோட்டில் வசித்த கருப்பசாமி 30, நகராட்சி காலனியை சேர்ந்த 17 வயது சிறுவனையும் தோட்ட வேலைக்கு ஆட்டோவில் குரங்கணிக்கு அழைத்து சென்றனர்.
குரங்கணி பஸ்ஸ்டாப் அருகே ஆற்றுப் பாலத்தில் நால்வரும்  மது அருந்தி விட்டு தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ள னர்.
அப்போது மாசிலாமணி மனைவியை சுரேஷ் உடன் சேர்த்து கருப்பசாமி தவறாக பேசி உள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த மாசிலாமணி, சுரேஷ், சிறுவன் உட்பட மூவரும்  மது போதையில் கீழே கிடந்த கல்லை எடுத்து கருப்பசாமியின் தலையில் தாக்கியும், கம்பால் அடித்து உள்ளனர்.
பலத்த காயம் அடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலே இறந்தார். தகவல் அறிந்த குரங்கணி போலீசார் சுரேஷ், மாசிலாமணி, 17 வயது சிறுவன் உட்பட மூவரையும் கைது செய்தனர்.

