UPDATED : நவ 26, 2026 12:06 AM
ADDED : நவ 26, 2026 12:06 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை முதல் தெருவை சேர்ந்தவர் முத்து 57.
பெரியகுளம்–வத்தலக்குண்டு ரோட்டில் டூவீலரில் வீட்டுக்கு சென்றார். எதிரே தேவதானபட்டி தெற்கு தெரு கார்த்திகேயன் 20, ஓட்டி வந்த டூவீலர், முத்து டூவீலரில் மோதியது. விபத்தில் காயமடைந்த முத்துவை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் முத்து இறந்து விட்டதாக கூறினர். வடகரை போலீசார் கார்த்திகேயன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
