ADDED : பிப் 16, 2026 05:29 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.சேடப்பட்டியை சேர்ந்தவர் நாராயணசாமி 42, தனது மனைவியுடன் சக்கம்பட்டியில் தேனி மெயின் ரோடு தனியார் பல்க் அருகே வாடகை வீட்டில் தங்கி அப்பகுதியில் சிறு ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ஓட்டலுக்கு விடுமுறை என்பதால் வீட்டை சுத்தம் செய்துள்ளனர். வீட்டில் ஈரப்பதம் இருந்த நிலையில் மின் சுவிட்ச்சை நாராயணசாமி ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர்
உதவியுடன் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மனைவி சுந்தரி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த நாராயணசாமிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
