/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குழந்தைகளுக்கான புதிய பள்ளி ‛'லிட்டில் வில்லே' துவக்க விழா
/
குழந்தைகளுக்கான புதிய பள்ளி ‛'லிட்டில் வில்லே' துவக்க விழா
குழந்தைகளுக்கான புதிய பள்ளி ‛'லிட்டில் வில்லே' துவக்க விழா
குழந்தைகளுக்கான புதிய பள்ளி ‛'லிட்டில் வில்லே' துவக்க விழா
ADDED : செப் 26, 2025 02:25 AM

தேனி: தேனி சிவாஜிநகரில் குழந்தைகளுக்கான 'லிட்டில் வில்லே' என்ற பள்ளியை தேனி பிளைவுட்ஸ் குழும நிறுவனர் ராஜசேகரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் செல்வக்குமார், ஜெயலட்சுமி ஜின்னிங் பேக்டரி நிர்வாகி குருசாமி, தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கத் தலைவர்ஜெகதீஸ், அரிமா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்மோகன், தொழிலதிபர் சமுத்திரபாண்டி, எட்பேக்ட் லேர்னிங் சிஸ்டத்தின் மண்டல மேலாளர் கோவிரத்னாகுத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
விழாவில் வணிகர் சங்க நிர்வாகிகள் திருவரங்கப்பெருமாள், அருஞ்சுனைக் கண்ணன், வேல்முருகன், வர்த்தக பிரமுகர்கள் கந்தகேசன், ரவிச்சந்திரன், செந்தில்குமார்,ஜெயமணி, கார்த்திகேயன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகி கமலக்கண்ணன், முதல்வர் கலாராணி குடும்பத்தினர்செய்திருந்தனர்.
விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகள் சேர்க்கை நடைபெறும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.