ADDED : அக் 30, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி அணை வடகிழக்கு பருவ மழை காலங்களில் மட்டுமே நிரம்பும். 52.5 அடி இதன் முழு கொள்ளளவாகும். 26 அடிவரை தண்ணீர் பயன்படுத்தலாம். ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பரில் பாசனத்திற்கென தண்ணீர் திறக்கப்படும். அதன்படி நேற்று காலை உத்தமபாளையம் ஆர்.டி.ஒ. செய்யது முகமது சண்முகா நதி அணையிருந்து தண்ணீர் திறந்தார்.
வினாடிக்கு 14.47 கன அடி விடுவிக்கப்படுகிறது. 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். இதன் மூலம் ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்ன ஒவலாபுரம், , எரசை, கன்னிசேர்வை பட்டி, அழகாபுரி, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி, ஆகிய கிராமங்களில் உள்ள 1440 ஏக்கர் பயன்பெறும்.

