/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விருப்ப பணி மாறுதலுக்கு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த எதிர்ப்பு
/
விருப்ப பணி மாறுதலுக்கு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த எதிர்ப்பு
விருப்ப பணி மாறுதலுக்கு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த எதிர்ப்பு
விருப்ப பணி மாறுதலுக்கு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த எதிர்ப்பு
ADDED : அக் 10, 2025 01:03 AM
தேனி:மக்கள் நல்வாழ்த்துறையில் காலியான 78 அலுவலக கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்பும் முன் அப்பணியிடங்களுக்கு விருப்ப மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிறுத்தி வைக்க தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் உரிமை நலச்சங்கத்தினர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவமனைகளில் 78 அலுவலக கண்காணிப்பாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு துறைகளில் எந்தவொரு பதவி உயர்வு வழங்கினாலும் காலிப்பணியிடங்களை தவிர்த்து, பணியில் உள்ள அலுவலக கண்காணிப்பாளர்களுக்கு விருப்ப மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்தி, பணியிடங்களுக்கான நியமனங்களை முடித்த பின்பு தான் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் உதவியாளர் பணியிடங்களில் இருந்து பதவி உயர்வு கோரி விண்ணப்பித்தவர்களில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து, வேறு துறைக்கு நியமிக்கப்பட்டவர்கள், ஒழுங்கு நடவடிக்கையில் உள்ளோர் மற்றும் இறந்தோரின் பெயரை நீக்கி கலந்தாய்வை நடத்திட வேண்டும் என அரசின் அரசாணை 131 வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை மீறி, அவசரகதியில் நேற்று (அக்., 9ல்) சென்னையில் நலப்பணிகள் இயக்குனரகத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது. இதனால் இயக்குனரகத்தை மருத்துவத்துறை பணியாளர்கள் உரிமை நலச்சங்கத்தினர் முற்றுகையிட்டு, இயக்குனரிடம் முறையிட்டனர்.
சங்க மாநிலத் தலைவர் கலாமோகன், பொதுச் செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது: 2010க்கு பின் மருத்துவத்துறையில் முதுநிலை பட்டியல் வெளியிடப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி 2018ல் வெளியிடப்பட்டது. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கான முதுநிலைப்பட்டியல் தயாரிப்புக்கு என தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., மூலம் பணி அமர்ந்தப்பட்ட நேரடி உதவியாளர்களுக்கு தகுதி திறன் அடிப்படையில் முதுநிலைப்பட்டியலை தயார் செய்து பதவி உயர்வு வழங்கவேண்டும் என்றனர்.