தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆளும் கட்சியினருக்கு எதிர்ப்பு: அடிப்படை வசதிகள் செய்வதில் அதிகாரிகள் திடீர் கவனம்

 ஆளும் கட்சியினருக்கு எதிர்ப்பு: அடிப்படை வசதிகள் செய்வதில் அதிகாரிகள் திடீர் கவனம்

 ஆளும் கட்சியினருக்கு எதிர்ப்பு: அடிப்படை வசதிகள் செய்வதில் அதிகாரிகள் திடீர் கவனம்


ADDED : ஏப் 12, 2026 03:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 03:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்:ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு எதிர்ப்புகள் தெரிவிப்பதால் உள்ளாட்சிகளில் குடிநீர் விநியோகம், பொது சுகாதார பராமரிப்பில் அதிகாரிகள் திடீர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப். 23 ல் நடைபெறுகிறது. வேட்டாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சிகளில் குடிநீர் சப்ளை, சாக்கடை சுத்தம் செய்வது, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில் ஏற்கெனவே இருந்த நிலையே தொடர்ந்தது. இதனால் ஆளும் கட்சி வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செல்லும் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்புகிறது. வேட்பாளர்கள் சமாளிக்க முடியாத நிலையும் உள்ளது.இந்த எதிர்ப்புக்களை தங்களுக்கு சாதகமாக்கி அ.தி.மு.க., த.வெ.க.,வினர் பிரசாரம் செய்கின்றனர்.

இப் பிரச்னை தொடர்பாக ஆளும் கட்சி தலைமைக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை, நகராட்சிகளின் இயக்குநர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக உள்ளாட்சிகளில் குடிநீர் விநியோகம், சாக்கடை சுத்தம் செய்தல், குப்பை அகற்றுதல் போன்ற பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us