ADDED : பிப் 24, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
உத்தமபாளையம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள்விழா போடியில் நடைபெறுகிறது. இது குறித்து தேனி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையது கான் வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த முதலவர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி போடி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர, சார்பு அணி நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
