sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 குறைந்த ரயில் இயக்கத்தால் மேம்பால அனுமதி தாமதம்

/

 குறைந்த ரயில் இயக்கத்தால் மேம்பால அனுமதி தாமதம்

 குறைந்த ரயில் இயக்கத்தால் மேம்பால அனுமதி தாமதம்

 குறைந்த ரயில் இயக்கத்தால் மேம்பால அனுமதி தாமதம்


ADDED : பிப் 05, 2026 06:04 AM

Google News

ADDED : பிப் 05, 2026 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியில் போதிய ரயில் போக்குவரத்து இல்லாததால் பெரியகுளம் ரோட்டில் மேம்பாலம் அமைக்க அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

தேனி பெரியகுளம் ரோட்டில் ரயில்வே கேட் உள்ளது.

இந்த கேட் காலை, மாலை, இரவில் ரயில் செல்லும் போது மூடப்படுகிறது. அப்போது இருபுறமும் ஒருகி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆம்புலன்ஸ் கூட செல்ல வழியின்றி திணறுகின்றன.

இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்க கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மாநிலநெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்து திட்ட அனுமதி வழங்கும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பின் திட்டம் கிடப்பில் போடப் பட்டது.

இதுபற்றி நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'ரயில்வே மேம்பாலம் மத்திய, மாநில அரசுகள் நிதியுடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

விதிகளின் படி ரயில்வே மேம்பாலம் அமைக்க அதிக ரயில்கள் கடந்து செல்ல வேண்டும் அல்லது குறிப்பிட்ட அளவு வாகனங்கள் ரயில்வே கேட்டை தினமும் கடந்து செல்ல வேண்டும். இந்த விதியின்படி குறைந்தளவு ரயில்கள் பெரியகுளம் ரோட்டை கடந்து செல்வதால் மேம்பாலத்திற்கான அனுமதி தாமதமாகி வருகிறது.' என்றனர்.






      Dinamalar
      Follow us