வெளிமாநில, மாவட்ட பயிற்சிக்குவிவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
வெளிமாநில, மாவட்ட பயிற்சிக்குவிவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 18, 2026 05:00 PM
தேனி, ஆக. 19–வெளிமாநிலம், வெளி மாவட்டத்தில் வழங்க உள்ள தோட்டக்கலை பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என தேனி கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: இந்த நிதியாண்டில் பழங்கள், காய்கறி பயிரில் உற்பத்தித் திறனை அதிகரித்தல் என்ற தலைப்பில் வெளிமாநில பயிற்சிக்கு 20 விவசாயிகள், காய்கறி சாகுபடி முறைகள் குறித்த உள்மாநில பயிற்சிக்கு 30 விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தவிர மாவட்ட அளவில் சின்ன வெங்காயத்தில் நோய் கட்டுப்படுத்தும் முறைகள், காளான் வளர்ப்பு தொழில்நுட்பம், நன்னாரிவேர் சாகுபடி முறை, ஏற்றுமதி உள்ளிட்ட பயிற்சிகள், தேனீ வளர்ப்பு, வீட்டு தோட்டம் அமைத்தல், தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ கட்டுப்படுத்துதல் ஆகிய நேரடி செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளுக்கு அனைத்து வட்டாரங்களில் இருந்தும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ள விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமும், உழவன் செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
