/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தினமலர் செய்தி எதிரொலியாக நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
/
தினமலர் செய்தி எதிரொலியாக நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
தினமலர் செய்தி எதிரொலியாக நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
தினமலர் செய்தி எதிரொலியாக நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ADDED : ஆக 21, 2025 08:20 AM
தேவதானப்பட்டி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஜெயமங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் துவங்கி உள்ளதால், நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலம், நடுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி பகுதியில் 900 ஏக்கரில் நெல் அறுவடை நடந்து வருகிறது.
முதல்கட்டமாக 50க்கும் அதிகமான விவசாயிகள்,ஜெயமங்கலம் தற்காலிக நெல்கொள்முதல் நிலையத்தில் எடை போடுவதற்காக ஆயிரக்கணக்கான கிலோவில் நெற்மணிகளை குவித்தனர்.
11 நாட்களாகியும் நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நெல் கொள்முதல் செய்வதற்கு வரவில்லை.
இதனால் விவசாயிகள் சிரமம் அடைந்தனர்.
விரைவில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் எடை போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று முதல் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட துவங்கி உள்ளது.--