ADDED : மார் 29, 2026 05:28 PM

தேனி:கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின் கடைசி ஞாயிறு அன்று குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தியவாறு ஊர்வலம் செல்வார்கள். மதுரை ரோட்டில் பங்களாமேடு முதல் உலகம் மீட்பர் சர்ச் வரை உதவி பாதிரியார் சுவீட்டன் தலைமையில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம் சென்றனர். சர்ச்சில் நடந்த திருப்பலியில் அன்னஞ்சி, பூதிப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
என்.ஆர்.டி. நகர் பரிசுத்த பவுல் சி.எஸ்.ஐ., சர்ச்சில் இருந்து பாதிரியார் அஜித் ஸ்டேன்லி தலைமையில் கிறிஸ்துவர்கள் ஊர்வலம் சென்றனர். பெரியகுளம் ரோடு, பழைய ஜி.எச்.,ரோடு, சமதர்மபுரம் வழியாக சர்ச்சில் ஊர்வலம் நிறைவடைந்தது. தொடர்ந்து நடந்த திருப்பலியில் தேனி நகர்பகுதி, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிறிஸ்துவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
