ADDED : மார் 13, 2026 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: தமிழக, கேரளா எல்லையில் போடி மெட்டு அமைந்துள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நடத்தும் பணி, பாதுகாப்பு பணிகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.
பாதுகாப்பு பணிக்காக தேனி மாவட்டத்திற்கு தெலுங்கானாவில் இருந்து துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். போடி டி.எஸ்.பி., முருகன் தலைமையில் செக்போஸ்டில் வாகன சோதனையை துவங்கி உள்ளனர். சோதனையில் வெடிமருந்து, மது, போதை பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் கடத்தி செல்கின்றனரா என கவனித்து வருகின்றனர்.

