தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வாகமண் கண்ணாடி நடைபாலம் செயல்படாததால் பயணிகள் ஏமாற்றம்

 வாகமண் கண்ணாடி நடைபாலம் செயல்படாததால் பயணிகள் ஏமாற்றம்

 வாகமண் கண்ணாடி நடைபாலம் செயல்படாததால் பயணிகள் ஏமாற்றம்


ADDED : ஏப் 25, 2026 05:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 05:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு:வாகமண்ணில் அமைக்கப்பட்ட கண்ணாடி நடைபாலம் நான்கு மாதங்களாக செயல்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண் முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்கு மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் அந்தரத்தில் 120 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி நடை பாலம் 2023 செப். 6ல் பயன்பாட்டுக்கு வந்தது. இது நாட்டில் மிகவும் நீளமான கண்ணாடி பாலமாகும். ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்பத்தில் பாலம் அமைக்கப்பட்ட போதும், கண்ணாடி போதுமான தரத்தில் இல்லை என கோழிக்கோடு ஐ.ஐ.டி., யை சேர்ந்த குழு நடத்திய ஆய்வில் தெரியவந்தது. அதனால் பாலம் பயன்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தனியார் நிறுவனம் பின்பற்றவில்லை. தவிர வருமானத்தில் தனியாருக்கு 60 சதவீதம், சுற்றுலா துறைக்கு 40 சதவீதம் என்ற ஒப்பந்தம் மீறப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இது போன்ற காரணங்களால் கடந்த நான்கு மாதங்களாக நடை பாலம் மூடப்பட்டது.

தற்போது கோடை என்பதாலும், கேரளா, தமிழகம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்ததாலும் சுற்றுலா பயணிகள் ஏராளம் வாகமண்ணை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கண்ணாடி நடைபாலம் செயல்படாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருவதுடன் அரசுக்கு ரூ.பல லட்சம் வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us