/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பஸ் ஸ்டாண்டில் சிதறிய கற்களால் பயணிகள் சிரமம்
/
தேனி பஸ் ஸ்டாண்டில் சிதறிய கற்களால் பயணிகள் சிரமம்
தேனி பஸ் ஸ்டாண்டில் சிதறிய கற்களால் பயணிகள் சிரமம்
தேனி பஸ் ஸ்டாண்டில் சிதறிய கற்களால் பயணிகள் சிரமம்
ADDED : ஜூன் 15, 2025 06:55 AM

தேனி : தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளிவரும் பகுதியில் ஜல்லி கற்களை நடுரோட்டில் கொட்டி சென்றதால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோட்டில் பல இடங்களில் பள்ளங்கள் இருந்தன. இதனை சீரமைக்கும் பணி சில நாட்களுக்கு முன் நடந்தது. இதற்காக கான்கிரீட் கலவைகளை கொட்டி பள்ளங்கள் மூடப்பட்டன. ஆனால் கான்கிரீட் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஜல்லி கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவை நடுரோட்டில் விட்டு சென்றனர். இதனை அகற்றாமல் அப்படியே உள்ளன.இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுகள், பயணிகள் தடுமாறுகின்றன.
நகராட்சி அதிகரிகள் ரோட்டில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள், எம் சாண்ட் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.