தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பட்டாசு வெடித்ததால் பயணிகள் திணறல்

 பட்டாசு வெடித்ததால் பயணிகள் திணறல்

 பட்டாசு வெடித்ததால் பயணிகள் திணறல்


ADDED : ஏப் 04, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 06:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி:ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகிராஜன் தொண்டர்களுடன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இதனால் மதுரை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பயணிகளுடன் நின்ற பஸ்கள் அருகில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர்.

இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் புகை மண்டலத்திற்குள் சிக்கி மூச்சுவிட சிரமப்பட்டனர். குழந்தைகள் அலறினர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ரோட்டில் பட்டாசு வெடிப்பதை தடுக்காமல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேடிக்கை பார்த்ததால் பலரும் ஆத்திரம் அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us