ADDED : மார் 02, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
தேனி: வீரபாண்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் அசோசியேசன் (பேக்சியா) சார்பில் மாநில நிர்வாகக் குழுக்கூட்டம், தேனி மாவட்ட பேரவைக்கூட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் அன்புக்கரசு முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் குமரேசன், மாவட்ட செயலாளர் ராமையா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கணினி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது, பாகுபாடில்லா ஓய்வூதிய திட்டம், காலதாமதமின்றி பதவி உயர்வு உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்றகோரி தீர்மானம் நிறைவேற்றினர்.
