ADDED : பிப் 27, 2026 07:50 AM

தேனி: இந்திய கம்யூ., கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் தேனியில் அமைதி ஊர்வலம் நடந்தது. பெரியகுளம் ரோடு ரயில்வே கேட் அருகே துவங்கிய ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை நடந்தது. இ.கம்யூ., தாலுகா செயலாளர் மொக்கைமாயன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், வழக்கறிஞர் முத்துராமலிங்கம், காங்., மாவட்ட தலைவர் கோபிநாத், ஏ.ஐ.டி.யு.,சி., நிர்வாகி பவுசியாபானு, மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் தர்மர் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
போடி: - இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவையொட்டி போடியில் நேற்று அவரது உருவ படத்திற்கு அனைத்து கட்சி சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இ. கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் ரவி முருகன், நகர செயலாளர் சத்யராஜ். ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம், அ.ம.மு.க., நா.த.க., உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
