UPDATED : அக் 08, 2026 06:52 PM
ADDED : அக் 08, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
போடி: போடி அருகே முந்தல், சிறக்காடு, பிச்சாங்கரை, வடக்குமலை, சோலையூர், போதன்ஓடை மலையை ஒட்டி வனப்பகுதிகள், அணைக்கரைப்பட்டி, அணைப்பிள்ளையார், பரமசிவன் கோயில் செல்லும் ரோடு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் மயில்கள் அதிக எண்ணிக்கையில் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின் றன. போதிய மழை இல்லாததால் வனம், மலை சார்ந்த பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. மயில்களுக்கான போதிய உணவு, தண்ணீர் கிடைப்பது இல்லை. இதனால் அவை விவசாய நிலங்கள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் காலை, மாலைகளில் உலா வருகின்றன. அவற்றை ஏராளமானோர் பார்த்து ரசிக்கின்றனர்.
மயில்களுக்கான பாதுகாப்பு குறித்து வனத்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
