தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ அடிப்படை வசதிகள் இல்லாத மயானத்தால் மக்கள் சிரமம்

அடிப்படை வசதிகள் இல்லாத மயானத்தால் மக்கள் சிரமம்

அடிப்படை வசதிகள் இல்லாத மயானத்தால் மக்கள் சிரமம்


ADDED : மே 17, 2025 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2025 03:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: சிலமலை மயானத்தில் தண்ணீர், மின்வசதி, நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சி பகுதியில் 1600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

சிலமலை வடக்குப் பகுதியில் உள்ள பொது மயானத்திற்கு செல்ல ரோடு வசதி இன்றி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல மக்கள் சிரமம் அடைகின்றனர். இறந்தவர்களுக்கு மயானத்தில் இறுதி சடங்கு செய்ய தண்ணீர் வசதி இல்லாததால் நீண்ட தூரம் சென்று தோட்ட கிணற்றில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து பயன் படுத்துகின்றனர்.

எரியூட்டு மையம் இல்லாமல் திறந்த வெளியில் எரிக்கின்றனர். மழை காலங்களில் மக்கள் ஒதுங்கி நிற்கு கூட நிழற்கூரை இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மின்வசதி, நிழற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர போடி ஒன்றிய, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us