/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அதிகாரிகள் தாமதத்தால் கிராம சபையில் கலைந்து சென்ற மக்கள் பி.டி.ஓ., சமாதானத்திற்கு பின் பங்கேற்பு

ADDED : அக் 12, 2025 04:58 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் ரங்கசமுத்திரம் ஊராட்சியில் நேற்று காலை 11:00 மணிக்கு துவங்கிய கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர், பார்வையாளர் வர தாமதமானதால் காத்திருந்த பொதுமக்கள் கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
அக்.,2ல் நடப்பதாக இருந்த கிராம சபை கூட்டங்கள் அரசு அறிவிப்புக்குப்பின் நேற்று நடந்தது. ஆண்டிபட்டி ஒன்றியம் ரெங்கசமுத்திரம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள சேவை மைய கட்டிடத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஊராட்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்றனர். வருவாய்த்துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட சில துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் இருந்தனர். கூடுதல் பொறுப்பில் உள்ள ஊராட்சி செயலாளர் ஜீவா தேக்கம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்திற்கு சென்றுவிட்டார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பார்வையாளரும் குறிப்பிட்ட நேரத்திற்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கூட்டத்தில் தங்கள் பிரச்னைகள் குறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது, சம்பந்தப்பட்ட அலுவலர்களே இல்லை என்று தெரிவித்து கூட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர். தகவல் அறிந்த பி.டி.ஓ., அய்யப்பன் ரங்கசமுத்திரம் ஊராட்சியில், கலைந்து சென்ற பொது மக்களை சமாதானம் செய்து மீண்டும் கூட்டத்தில் பங்கேற்க செய்தார். தாமதமாக துவங்கிய கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய பின் மதியம் 2:00 மணிக்கு கூட்டம் முடிந்தது.