ADDED : மார் 11, 2024 06:52 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுாரில் அரைகுறையாக நடந்த ரோடு அமைக்கும் பணியை பொது மக்கள் தடுத்துநிறுத்தினர்.
கூடலுாரில் முத்தையர் தெரு, மொள்ளு திருப்பதி கவுண்டர் தெருவில் தார் ரோடு அமைக்கும் பணி நேற்று மாலை துவங்கியது.
ஜல்லிக்கற்களை அகற்றாமலும் ஆழப்படுத்தாமலும் ஏற்கனவே இருந்த பழைய ரோட்டின் மட்டத்திற்கு மேல் பகுதியில் அரைகுறையாக அமைக்கும் பணி துவங்கியதால் அப்பகுதி பொது மக்கள் தடுத்து நிறுத்தினர்.
புதிதாக அமைக்கப்படும் ரோடு குடியிருப்பு பகுதியை விட உயரமாக இருப்பதால் மழைக் காலங்களில் வெள்ள நீர் முழுவதும் வீட்டிற்குள் புகும் அபாயம் இருப்பதால் பழைய ரோட்டை ஆழப்படுத்தி அதன் பின் ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தனர்.
