/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர்திறப்பு அதிகரிப்பால் குறையும் பெரியாறு அணை நீர்மட்டம்
/
நீர்திறப்பு அதிகரிப்பால் குறையும் பெரியாறு அணை நீர்மட்டம்
நீர்திறப்பு அதிகரிப்பால் குறையும் பெரியாறு அணை நீர்மட்டம்
நீர்திறப்பு அதிகரிப்பால் குறையும் பெரியாறு அணை நீர்மட்டம்
ADDED : பிப் 05, 2024 01:44 AM
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவ மழையால் அதிகபட்சமாக 2023 டிச.23ல் 141 அடியை எட்டியது. அதன் பின் மழை தீவிரமடையவில்லை. இதனால் நீர்மட்டம் குறைய துவங்கியது.
ஜன.31ல் தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 134.20 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 295 கனஅடியாக இருந்தது.
நீர் இருப்பு 5679 மில்லியன் கன அடியாகும். நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பதிவாகவில்லை. தொடர்ந்து கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்மட்டம் மேலும் குறையும் வாய்ப்புள்ளது.
தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 135 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

