கருத்தராவுத்தர் கல்லூரிக்கு நிரந்தர சிறுபான்மை அங்கீகாரம்
கருத்தராவுத்தர் கல்லூரிக்கு நிரந்தர சிறுபான்மை அங்கீகாரம்
ADDED : பிப் 16, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி 1956 ல் மறைந்த முதல்வர் காமராஜரால் துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மாணவர்களின் கல்லூரி கனவை நிறைவேற்ற
இந்த கல்லூரியை கருத்தராவுத்தர் துவக்கினார். தனது சொந்த நிதி, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை இந்த கல்லூரி கட்ட செலவழித்தார். 70 வது ஆண்டை நெருங்கியுள்ள இக் கல்லூரிக்கு தமிழக அரசு சார்பில் நிரந்தர சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகார கடிதத்தை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முகமது மீரானிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த கல்லூரி தாளாளர் தர்வேஷ் முகைதீன் மற்றும் நிர்வாக குழுவினர் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
