/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூட்டுறவுச்சங்கங்களுக்கு நிரந்தர அலைபேசி எண்
/
கூட்டுறவுச்சங்கங்களுக்கு நிரந்தர அலைபேசி எண்
ADDED : ஜன 03, 2026 07:34 AM
தேனி; தமிழகத்தில் 4473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதுதவிர 23 மத்திய கூட்டுறவு வங்கிகளின் கீழ் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கள் என பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.
இச்சங்கங்களுக்கு என இதுவரை தனி அலைபேசி எண்கள் வழங்கப்படவில்லை. இதனால் கூட்டுறவு சங்க செயலாளர்களின் அலைபேசி எண்களை உரங்கள் வாங்குதல், கடன் பெறுதல் உள்ளிட்டவைக்கு பயன்படுத்தி வந்தனர். இப்பணிகள் குறிப்பிட்ட அலைபேசி எண்ணிற்கு ஓ.டி.பி., சென்ற பின் நடைபெறுகின்றன.
சங்க செயலாளர்கள் பணியிட மாற்றம் அல்லது ஓய்வு பெற்றால் அவரது அலைபேசிக்கு ஓ.டி.பி., செல்வதால் கூட்டுறவு சங்க பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களுக்கும் நிரந்த அலைபேசி எண்கள் (CUG) வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

