/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
/
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
ADDED : டிச 03, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்:பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. டிட்வா புயல் மழையால் நவ.29 இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் நவ.30. டிச.1 இரு நாட்கள் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நீர்வரத்து சீரானது கணக்கிடப்பட்டது. இதனால் நேற்று முதல் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு வனத்துறை நிர்வாகம் அனுமதித்தது.
--

