UPDATED : அக் 08, 2026 06:57 PM
ADDED : அக் 08, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் குழு விளையாட்டுகள் மூலம் மாணவர்களுக்கு ஒரு நாள் ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் நடந்தது.
தேன் சுடர் பெண்கள் இயக்கம், தேனீ கலை இலக்கிய மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் இளங்கோவன் தலைமை வகித்தார். முனைவர் ராதாமணி வரவேற்றார். தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரி செயலாளர் ஜெயக்கொடி மாணவர்களின் சுய முன்னேற்றம் குறித்து பேசினார். ஐந்திணை இலக்கிய கள துணைச் செயலாளர் ஷர்ஜிலா பர்வீன் யாகூப் போட்டித் தேர்வுகள் குறித்து பயிற்சி வழங்கினார். முனைவர் அழகர்சாமி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தேனி கலை இலக்கிய மைய செயலாளர் பாண்டியராஜன் செய்திருந்தார்.
